சித்திரச் சீட்டு - உங்களுக்குரிய வழியைக் காட்டும் வழிகாட்டி!

பரந்து விரிந்த சித்திரச்சீட்டுகளின் அற்புத உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்!

வாழ்வு சித்திரங்களாலும் குறியீடுகளாலும் நிறைந்துள்ளது. சித்திரச்சீட்டுகளும் வாழ்வைப்போலவே சித்திரங்களாலும் குறியீடுகளாலும் நிறைந்துள்ளது.

  • சித்திரச்சீட்டு என்பது என்ன ?
  • அதன் பயன் என்ன ?

டாரட் (Tarot) என்பது சித்திரச்சீட்டு கட்டு. பழமையான சீனப்பழமொழி என்னவென்றால் ஒரு சித்திரம் 10000 வார்த்தைகளுக்கு சமம். சித்திரச்சீட்டுகளைப் பொறுத்தவரை ஒரு சித்திரத்தை நீங்கள் எண்ணற்ற வழிகளில் காணலாம். நாம் பல சமயங்களில் நம்மை அறியாமல் சித்திரங்களிலும், குறியீடுகளிலும் யோசிக்கிறோம். வாழ்க்கையே சித்திரங்களின் ஒரு தொகுப்புதான்.

இந்த சித்திரச்சீட்டுகள் உங்களது உள்ளுணர்வுக்கும், உங்கள் வாழ்வை பாதிக்கும் உங்களது தன்ணுணர்வற்ற மனதின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தி உங்களது வாழ்வில் உங்களுக்குரிய வழியை காட்டும் வழிகாட்டியாக விளங்குகின்றன.

உங்களுக்கு சித்திரங்களின் சக்தியையும், உங்களுடைய வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர இந்த சித்திரச்சீட்டுகளை நீங்கள் எப்படி பயன்படுத்த இயலும் என்பதையும், நாம் சித்திரச்சீட்டுகளை தொட்டு வாசிப்பதன்  மூலம் காணலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க..

- நேசத்துடன் நிர்தோஷ்.